டி-20 உலகக் கோப்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்

வியாழன், 3 நவம்பர் 2022 (17:40 IST)
டி-20 உலகக் கோப்பை போட்டி நடந்து வரும் நிலையில், நாளைய போட்டியிலிருந்து ஆஸ்திரேலியே அணி கேப்டன் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் லிமிடெட் ஓவர் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சில மாதங்களுக்கு முன்னர் , சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,  சமீபகாலமாக அவர் பார்மில் இன்றி தவித்து வருகிறார்.

இருப்பினும் அணியின் வெற்றிக்கு கேப்டனாக வழிகாட்டி வருவதாக அவரைப் பாராட்டி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் டி-20 2022 ஆம் ஆண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள இந்த ஆஸ்திரெலிய அணி, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இப்போட்டியில் அவர் பீல்ட் செய்த போது அவர் காயமடைந்ததை அடுத்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் மேத்யு வேட் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த  நிலையில், நாளை சூப்பர் 12 தகுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து ஆரோன் பிஞ்ச் தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்