இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த தொடரில் இதுவரை தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைப் பெற்றுள்ளது. இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் சி எஸ் கே அணி தோற்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளைத் தோற்ற மோசமான சாதனையைப் படைக்கும். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த மாதிரியான தோல்வியைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.