உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 31வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோத உள்ளன இந்த போட்டிக்கு சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது
முதலில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி அதிக ரன்களை குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பின் அபாரமான பந்து வீச்சின் மூலம் நமீபியாவை மிகக் குறைந்த ரன்களில் சுருட்டி மேலும் ரன் ரேட்டை அதிகரித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
பாகிஸ்தான் அணி ஏற்கனவே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது என்பதும் நமீபியா 3 ஒரு போட்டியில் விளையாடி ஒரு போட்டியில் வென்று இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.