ஆஸ்திரேலியாவை வீழ்த்த தோனி போன்ற பிளேயர் தேவை: சொன்னது யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (07:45 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்களில் தோல்வி அடைந்தது என்பது தெரிந்ததே 
 
ஆஸ்திரேலிய அணி கொடுத்த மெகா ஸ்டாரான 375 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னாள் மேற்கிந்திய கிரிக்கெட் வீரரும் வேகப்பந்து வீச்சாளருமான மைக்கேல் ஹோல்டிங், இந்திய அணி குறித்து குறிப்பிடுகையில் மிகப்பெரிய இலக்கை நோக்கி சேஸ் செய்யும் போது இந்திய அணிக்கு தோனி போன்ற ஒரு வலிமையான வீரர் தேவை என்று குறிப்பிட்டுள்ளார் 
 
மிடில் ஆர்டரில் தோனி இறங்கும் போது அவர் டார்கெட்டை நோக்கி விளையாடுவதில் வல்லவர் என்றும் எந்தவித பயமும் இல்லாமல் களத்தில் அவர் விளையாடுவார் என்றும் தோனி இல்லை என்றாலும் தோனி போன்ற ஒரு வலிமையான வீரர் அந்த இடத்தில் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக தான் விளையாடினார்கள் என்றும் இருப்பினும் தோனி போன்ற வலிமையான வீரர் ஒருவர் இருந்தால் மட்டுமே மிகப்பெரிய இலக்கை எட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பிசிசிஐ கணக்கில் கொண்ள்ளுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்தோனி, மைக்கேல் ஹோல்டிங், ஆஸ்திரேலியா,
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்