கேப்டனாக அதிக சதம்… பாண்டிங் சாதனையை தகர்ப்பாரா கோலி!

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2021 (07:50 IST)
கேப்டனாக சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைக்க கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவை.

இந்திய அணியின் கேப்டன் கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தன்னிகரில்லாத வீரராக உள்ளார். ஆனால் சமீபகாலமாக அவர் எந்தவொரு போட்டியிலும் சதமடிக்கவில்லை. அதனால் அவரின் ஆட்டத்திறன் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நாளை மோட்டீரா மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பார்.

கேப்டனாக சர்வதேசப் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் மற்றும் கோலி இருவரும் தலா 41 சதங்களோடு சமநிலையில் உள்ளனர். பாண்டிங் சாதனையை தகர்க்க கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்