தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தை நெட்பிளிக்ஸ் தளம் 55 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட்டே 60 கோடி ரூபாய் என்பதால் தொலைக்காட்சி மற்றும் மற்ற உரிமைகளை வைத்து வரும் தொகையில் தயாரிப்பாளர் லாபம் பார்க்க முடியும் என சொல்லப்படுகிறது. ஜகமே தந்திரம் திரைபடம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக தொகையில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.