நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் படம் ரீ -ரிலீஸ் ; வசூல் சாதனை நிகழ்த்துமா???

திங்கள், 22 பிப்ரவரி 2021 (17:39 IST)
நடிகர் அஜித்தின் பில்லா படம் விரைவில் தமிழகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

நடிகர் அஜித் நடித்த பில்லா முதல் பாகத்தை இயக்கியவர் இயக்குநர் விஷணுவர்தன்.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் பில்லா. ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக் படமான இது நடிகர் அஜித்தின் ஸ்டைலான நடிப்புக்காகப் பேசப்பட்டது. அதேபோல் இயக்குநர் விஷ்ணுவர்தனின் இயக்கமும் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன்பின்னர் நடிகர் அஜித் – ராணா ஆகிய இருவரது நடிப்பில் ஆரம்பரம் படத்தை இயக்கினார் அதுவும் பெரும் வெற்றிப் படமானது.

இந்நிலையில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெற்றிப் பெற்ற பில்லா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா, ரகுமான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதையடுத்து அஜித் நடிப்பில் பில்லா 2 படம் ரிலீசானது. இப்படத்தை சக்ரீ இயக்கினார். ஆனால் அப்படம் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், பில்லா  படத்தை வரும் மார்ச் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள்  மகிழ்ச்சியில் உள்ளனர். எப்போதும் பார்த்தாலும் விறுவிறுப்பு குறையாத படத்தை புதிய படம் போலவே பார்ப்பார்கள் எனவும் இதனால் வசூல் குவிய வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள்கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்