பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக கிறிஸ்டனுக்கு அதிக வாய்ப்பு!

Webdunia
வியாழன், 28 அக்டோபர் 2021 (15:16 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இசான் மணி செயல்பட்டு வருகிறார். நாளையோடு அவரின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் அவருக்கு பதில் யார் தலைவர் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இசான் மணியும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராசாவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர். இதனால் ரமீஸ் ராஜா அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகாலம் அந்த பதவியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பாக் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேட ஆரம்பித்து இருக்கும் அவர் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால் உலகக்கோப்பையைக் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்