பாஜகவோடு இன்னும் பல ஆண்டுகள் நாம் போராட வேண்டியிருக்கும்- பிரசாந்த் கிஷோர் பேச்சு!

வியாழன், 28 அக்டோபர் 2021 (11:00 IST)
தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் இப்போது காங்கிரஸில் சேர முயற்சி செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கு சமீபத்தில் வெற்றியைத் தேடித்தந்தவர் பிரசாந்த் கிஷோர். மூவரையும் முதல்வராகிய பிரசாந்த் கிஷோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக்க தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து நீண்ட நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்தார். இது கட்சிக்குள்ளாகவே சலசலப்புகளை உருவாக்கியது. இந்நிலையில் இப்போது எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியோடு இணைந்து செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சி குறித்து தெரிவித்திருந்தார்.

நேற்று கோவா சென்றிருந்த அவர் பேசும்போது ‘இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜக பலமாக இருக்கும். முன்பு காங்கிரஸ் 40 ஆண்டுகள் வலுவாக இருந்ததைப் போல. எனவே மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற நினைப்பின் வலையில் ஒருபோதும் சிக்காதீர்கள். மோடியை நீக்கலாம். ஆனால் பாஜகவை நீக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்