மேஜர் லீக் கிரிக்கெட் 2025 தற்போது முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், ஒரு அற்புதமான சதம் அடித்து பல சாதனைகளை படைத்து வரலாறு உருவாக்கியுள்ளார்.
ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 53 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். இது இந்த சீசனில் அவரது இரண்டாவது சதம் ஆகும். சில நாட்களுக்கு முன்பு சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிராக 100 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் 40 வயதை எட்டிய பிறகு இரண்டு டி20 சதங்களை அடித்த வரலாற்றின் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
40 வயதிற்கு பிறகு டி20 போட்டிகளில் சதம் அடித்தவர்கள்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (2 சதங்கள், 43 இன்னிங்ஸ்), ஜுபைர் அஹமது (1 சதம், 4 இன்னிங்ஸ்), இம்ரான் ஜனட் (1 சதம், 15 இன்னிங்ஸ்), கிரஹாம் ஹிக் (1 சதம், 23 இன்னிங்ஸ்), பால் காலிங்வுட் (1 சதம், 29 இன்னிங்ஸ்).