ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகள்: ஜடேஜா சாதனை!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:23 IST)
ஒரு நாள் போட்டிகளில் இந்தியா ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்துள்ளார்.
 
தற்போது இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில்  தற்போது வங்கதேசம் பேட்டிங் செய்து வருகிறது,. 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா,  சமீம் உசேன் விக்கெட்டை எடுத்த நிலையில் அவர் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். இதனை அடுத்து  ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுக்களை  வீழ்த்தி சாதனை செய்த ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இந்த நிலையில் வங்கதேச அணி சற்றுமுன் 47 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்