பேன் இந்தியா படம்லாம் வேணாம்பா… லியோ திரைக்கதைக்கு விஜய்யின் ரியாக்‌ஷன்!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:43 IST)
இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதனால் இந்த படம் ஒரு பேன் இந்தியன் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தொடக்கத்தின் போது இதை பேன் இந்தியன் படமாக கொண்டு செல்லவேண்டும் என தானும் மற்றும் இயக்குனர் லோகேஷ் கூறியதாக தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு விஜய் “பேன் இந்தியன் படமெல்லாம் வேண்டாம். நம்ம ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி படம் பண்ணுவோம்” எனக் கூறினாராம். ஆனால் பின்னர் தானும் லோகேஷும் இணைந்து விஜய்யை சம்மதிக்க வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் இப்போது லியோ படத்தை வட இந்தியாவில் சிறப்பாக மார்க்கெட்டிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் லலித்குமார் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்