இலங்கை அணியில் முக்கிய வீரர் காயம்… இந்திய அணிக்கு அடித்த லக்!

வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (14:14 IST)
நேற்று முன்தினம் நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இந்தியாவிடம் 41 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தானை வெற்றி பெற்று இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகிவிட்டது. இரு அணிகளும் மோதும் இறுதிப் போட்டி நாளை மறுநாள் கொழும்பு மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் காயமடைந்த மகீஷ் தீக்‌ஷனா இறுதிப் போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழல் பந்துவீச்சாளர்களிடம் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்