கோஹ்லியின் விக்கெட்டை கொண்டாடாத ஜடேஜா; என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 6 மே 2018 (13:48 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியியை வீழத்திய பின் ஜடேஜா கொண்டாடாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 
ஐபிஎல் 2018 தொடரில் நேற்று சென்னை - பெங்களூர் அணிகள் விளையாடியது. இதில் சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி அசத்தினர்.
 
ஜடேஜா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் விராட் கோஹ்லி ஆவுட் ஆனார். ஆனால் ஜடேஜா இந்த விகெட்டை கொண்டாடவில்லை. இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
போட்டியின் முதல் பாதி முடிந்த பின் ஜடேஜாவிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜடேஜா, நான் வீசிய முதல் பந்திலே விராட் கோலி ஆட்டமிழந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று கூறினார்.
 
இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் ஜடேஜாவை கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்