அனுஷ்கா ராசி இல்லாதவர்....கோஹ்லி விவாகரத்து செய்துவிடுங்கள்: ரசிகர்கள் கோரிக்கை

புதன், 2 மே 2018 (15:58 IST)
அனுஷ்கா ராசி இல்லாதாவர் என்றும் அவரை விவாகரத்து செய்துவிடுங்கள் என்றும் ரசிகர்கள் விராட் கோஹ்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2018 தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
 
பெங்களூர் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் பெங்களூர் அணி ரசிகர்கள் மற்றும் விராட் கோஹ்லி ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தோனிக்கு அடுத்து இந்திய அணியில் ரோகித் மற்றும் கோஹ்லிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
 
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை - பெங்களூர் அணிகள் இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியை காண விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா வந்திருந்தார்.
 
இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் அனுஷ்கா சர்மாதான் என்று கோஹ்லியின் ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வந்தனர். சிலர் அனுஷ்கா சர்மா ராசி இல்லாதாவர். அவர் வந்ததால்தான் பெங்களூர் தோல்வி அடைந்தது. இனிமேல் தயவு செய்து போட்டியை காண வராதீர்கள் என்று பதிவிட்டுள்ளனர்.
 
அனுஷ்கா சர்மாவை நீங்கள் விவாகரத்து செய்துவிடுங்கள் என்று சிலர் விராட் கோஹ்லிக்கு டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். போட்டியில் அணி தோல்வி அடைவதால் அதற்கு அணியில் விளையாடத நபர் ஒருவர் எப்படி காரணமாக முடியும். 
 
அதுவும் கிரிக்கெட் போட்டிக்கு துளியும் சம்மதமில்லாதவர் அனுஷ்கா சர்மா. ரசிகர்கள் மூடதனமாக செயல்படுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரார்களின் ஆட்டத்தை விமர்சனம் செய்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வீரர்களின் மனைவி போட்டியை காண வருவது குற்றமா? என்ற நிலைக்கு ரசிகர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவது மிகவும் தவறானது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்