திடீரென வந்த ஒலிம்பிக் வாய்ப்பு; டோக்கியோ பறந்த இந்திய வீராங்கனை!

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (09:46 IST)
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனைக்கு திடீர் வாய்ப்பு வந்ததால் புறப்பட்டு சென்றுள்ளார்.

டோக்கியோவில் பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. எதிர்வரும் 4ம் தேதி ஒலிம்பிக்கிற்கான கோல்ஃப் போட்டிகள் தொடங்க உள்ளன, இந்நிலையில் கோல்ஃப் போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரியா நாட்டு வீராங்கனைகள் அறிவித்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு அடுத்ததாக தகுதி பட்டியலில் இருந்த இந்திய கோல்ஃப் வீராங்கனை தீக்‌ஷா தாகருக்கு ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவர் உடனடியாக டோக்கியோ புறப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்