கடந்த சில நாட்களாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்பாக இருக்கும் என்பதும், இந்த போட்டியை ஏராளமானோர் நேரில் மற்றும் தொலைக்காட்சியில் காண்பார்கள் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில், இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெற உள்ளது.
இந்தியா ஏற்கனவே வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்வது உறுதியாகிவிடும். ஆனால் அதே நேரத்தில், பாகிஸ்தான் ஏற்கனவே நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்திருப்பதால், இன்றைய போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்று நடந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 351 ரன்கள் எடுத்த நிலையில், அந்த இலக்கை ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு எடுத்து வெற்றி பெற்றது.