CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?

Mahendran

சனி, 22 பிப்ரவரி 2025 (07:59 IST)
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம், இனி எந்த தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியும் அங்கீகாரம் பெற மாநில அரசின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. புதிய நடைமுறையின் கீழ், பள்ளிகள் தங்களுக்கு தேவையான அங்கீகாரத்தை பெறுவதற்காக மத்திய அரசிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
 
இந்த மாற்றம் தனியார் பள்ளிகளின் நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகள் அனுமதி பெற மாநில அரசின் தடையில்லா சான்று கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளியின் நிலைமை, வசதிகள் மற்றும் தரநிலைகள் குறித்து மாநில கல்வித்துறையின் கருத்து கேட்ட பிறகே அங்கீகாரம் வழங்கப்படும்.
 
விண்ணப்பித்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து மாநில கல்வித்துறையின் ஆட்சேபனை இருந்தால், அதைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாவிட்டால், அந்த பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை தனியார் பள்ளிகளுக்கு விரைவான அனுமதி வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
புதிதாக நடைபெறபடுத்தப்படும் இந்த திட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்