ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

vinoth

சனி, 9 ஆகஸ்ட் 2025 (08:01 IST)
இந்திய அணி உருவாக்கிய மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் & பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாகி வருகிறார். இந்திய அணியின் பேட்டிங் பின்வரிசையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் தூக்கி நிறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த தொடரில் மான்செஸ்டரில் நடந்த போட்டியில்  ரிஷப் பண்ட்  கிறிஸ் வோக்ஸ் வீசிய யார்க்கர் பந்தைக் காலில் வாங்கினார். இதன் காரணமாக அவருக்கு காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த காயத்தினுடனேயே அவர் அந்த இன்னிங்ஸில் மீண்டும் களமிறங்கி ஆடினார். ஆனால் அதன் பிறகு தொடரை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பண்ட் குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர் “ரிஷப் பண்ட் போன்றவர்களை அவர்களின் போக்கில் விட்டுவிட வேண்டும். யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் தங்களுக்கென திட்டம் வைத்திருப்பார்கள். அதை அவர்கள் செயல்படுத்துவார்கள். ” எனப் பாரட்டிப் பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்