நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அபார சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதை தொடர்ந்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் கான்வே, ஹென்றி மற்றும் ரச்சி ரவீந்திரா ஆகிய மூவரும் 150 ரன்களுக்கு மேல் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி, 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், நியூசிலாந்து அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.
இந்த வெற்றி, நியூசிலாந்து அணியின் ஆதிக்கத்தையும், டெஸ்ட் போட்டியில் அதன் வலிமையையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.