மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

Mahendran

சனி, 22 பிப்ரவரி 2025 (08:03 IST)
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டு மாணவர்களும், பெற்றோர்களும் வரவேற்று வருகின்றனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
3வது மொழியை அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய, பட்டியலின மாணவர்கள் படிக்கவிடாமல் தடுப்பது நவீன தீண்டாமை என்றும், மத்திய அரசிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வராமல் இருக்க முதல்வரும், துணை முதல்வரும் தான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய தேசியக் கல்விக் கொள்கை சர்வதேச அளவில் தயார்படுத்த  ஊக்கப்படுத்தப்படுகிறது என்றும், கல்வி விவகாரத்தில் திமுகவினர் அரசியல் செய்யக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார். 
 
இந்த நிலையில் மொழியின் பெயரால் பிரிவினை ஏற்படுத்துவதை கைவிடுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொழியை வைத்து பிரிவினையை உருவாக்கும் முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்திய பிரதமர் மோடி, இந்திய மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்