சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

Siva

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (08:30 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனிக்கு பிறகு இன்னும் சரியான கேப்டன் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பது, அவர் சி.எஸ்.கே.வின் கேப்டன் பதவிக்கு ஆசைப்படுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மகேந்திர சிங் தோனி தலைமையில், சி.எஸ்.கே. அணி ஐந்து முறை ஐ.பி.எல். கோப்பையை வென்று சாதனை படைத்தது. ஆனால், தோனிக்கு அடுத்த சரியான கேப்டனை அடையாளம் காண்பதில் அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது. 
 
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தனது யூடியூப் சேனலில், சஞ்சு சாம்சனை தோனிக்கு சரியான மாற்றாக பரிந்துரைத்தார். "சஞ்சு ஒரு மிகச் சிறந்த வீரர். அவருக்கு சென்னையில் நல்ல பிரபலம் உள்ளது. அவர் ராஜஸ்தான் அணியை விட்டு வெளியேறி சி.எஸ்.கே.வுக்கு வர விரும்பினால், அவரை கேப்டனாக தேர்வு செய்ய சிஎஸ்கே அணி தயங்க கூடாது," என்றும் ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.
 
ஸ்ரீகாந்தின் இந்த கருத்து வெளியான நிலையில், சஞ்சு சாம்சனும் தற்போது சி.எஸ்.கே.வுக்கு தோனிக்கு இணையாக ஒரு கேப்டன் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பது, அவர் சி.எஸ்.கே. அணிக்குக் கேப்டனாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை மறைமுகமாக வெளிப்படுத்துவது போல் உள்ளது.
 
ஆனால் தற்போது சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அணி நிர்வாகம் ருதுராஜை மாற்றிவிட்டு, சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்குள் கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்