இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லாது… பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆருடம்!

vinoth

சனி, 22 பிப்ரவரி 2025 (14:56 IST)
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று முன் தினம் தங்கள் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எளிதாக வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முதல் நாள் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியிடம் தோற்றது.

இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்வதே சிக்கலாகிவிடும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமீர் இந்தியா அடுத்த சுற்றுக்கு செல்லாது என்று கணித்துள்ளார். ஏ பிரிவில் நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள்தான் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்