ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

Siva

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (11:58 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அக்டோபரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரே அவர்களின் கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
2027 உலகக் கோப்பை வரை இருவரும் விளையாட விரும்பினால், இனி உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிபந்தனை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தச் செய்தி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பையை வென்ற இந்த இரண்டு முன்னணி வீரர்களும், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது, இந்திய அணியில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 
 
பிசிசிஐ-யின் நிபந்தனையை இருவரும் ஏற்றுக்கொள்வார்களா, அல்லது ஒருநாள் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்