சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: தேதி அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (15:20 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த ஆண்டில் இந்திய அணி இலங்கை, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது 
 
இலங்கைக்கு எதிரான தொடரை ஜனவரி 3ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 அதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும். அதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி தொடர் தொடங்க உள்ளதாகவும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்த தொடர் ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது
 
இதில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சென்னையில் போட்டி நடைபெற இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்