சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (15:23 IST)
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

 
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபனின் மகளிர் இரட்டையர் பிரிவில் அவரும் அவரது உக்ரேனிய பார்ட்னர் நதியா கிச்செனோக்கும் தொடக்கச் சுற்றில் தோல்வியடைந்ததை அடுத்து சானியா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
சானியா கூறியதாவது, ஓய்வு பெறுவதற்கு சில காரணங்கள் உண்டு. இது, சரி நான் விளையாடப் போவதில்லை என்பது போல எளிமையானது அல்ல. காயமடைந்தால் நான் குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக உணர்கிறேன். என் உடல் சோர்வாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 
 
இன்று என் முழங்கால் வலிக்கிறது, நாங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை, ஆனால் நான் வயதாகிவிட்டதால் குணமடைய நேரம் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று சானியா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்