முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த அதிரடி முடிவு!

புதன், 19 ஜனவரி 2022 (14:07 IST)
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த அதிரடி முடிவு!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது
 
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது 
 
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும் குயின்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியின் இந்த போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய, தென் ஆப்பிரிக்கா வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு:
 
தென்னாப்பிரிக்கா: குவிண்டன் டீகாக், மலன், மார்க்ரம், டூசன், பவுமா, மில்லர், அண்டிலே, ஜேன்சன், மஹராஜ், ஷம்சி, நிகிடி
 
இந்தியா: கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், அஸ்வின், ஷர்துல் தாக்குர், புவனேஷ்வர் குமார், பும்ரா,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்