ஆசிய விளையாட்டுப் போட்டியில் 69 பதக்கங்களை குவித்து இந்தியா சாதனை

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (12:06 IST)
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 69 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 
 
இந்த விளையாட்டில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. வழக்கம்போல் சீனா 132 தங்கம் உள்பட 289 பதக்கங்கள் குவித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்கள் வென்றதே சாதனையாக இருந்தது. அதனை உடைத்தெரிக்கும் வகையில் இந்தியா தற்பொழுது 69 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியின் கோலாகலமான நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்