இங்கிலாந்து அணியின் திட்டத்தை காலி செய்த இஷந்த் சர்மா

சனி, 1 செப்டம்பர் 2018 (17:16 IST)
முதல் இன்னிங்ஸில் அசத்திய மொயின் அலியை ஒன் டவுன் இறக்கிய இங்கிலாந்து அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.

 
இங்கிலாந்து - இந்தியா அணிகள் தற்பொது 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் குவித்தது.
 
பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் பவுலர்கள் மொயின் அலி மற்றும் சாம் குர்ரான் அசத்தினார். இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. புஜாரா சதம் விளாசி இந்திய அணியை முன்னிலை பெற செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 273 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து இங்கிலாந்து அணி தற்போது தனது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. மூன்றாவது நாளான இன்று போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
 
முதல் இன்னிங்ஸில் அசத்திய மொயின் அலியை ஒன் டவுன் இறக்கினார்கள். ஆனால் மொயின் அலி 9 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
 
இங்கிலாந்து 250 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்திய அணி இங்கிலாந்தை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. 
 
இன்றைய ஆட்டத்தை பொறுத்தே வெற்றி எந்த அணிக்கு என்பதை கணிக்க முடியும்.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்