இந்தியா பதக்க வேட்டை..... 7 பதக்கங்களை வென்று புது சாதனை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (09:42 IST)
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த போட்டி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தியாவிலிருந்து 54 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கின்றனர். 
 
இந்நிலையில் பாராலிம்பிக்ஸ் போட்டி வரலாற்றில் இந்தியா அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. அதிகபட்சம் 4 பதக்கங்கள் என்றிருந்த நிலையில் டோக்கியோவில் இதுவரை 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
 
பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்