பவீனாபென் இந்தியாவின் மகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்!

ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (15:13 IST)
பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பவீனாபென்னுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டி விமரிசையாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதில் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பவீனா பென் படேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தியாவின் மகள் பவீனாபென் படே பாராலிம்பிக்ஸின் பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளது மனதிற்கு மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்