சரித்திரம் படைத்த இந்திய மகளிர் அணி.. 17 ஆண்டுகளில் ஒரு தோல்வி கூட இல்லை..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (14:08 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதனை அடுத்து 17 ஆண்டுகளில் இந்திய மகளிர் அணி ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட தோல்வி அடையவில்லை என்ற வரலாற்று சாதனையை ஏற்படுத்தி உள்ளது.  மும்பை வான்கடே மைதானத்தில்  கடந்த 21ஆம் தேதி ஆரம்பித்த இந்திய மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதல் இன்னிங்சில் 219 ரன்கள் எடுத்த அந்த அணி இரண்டாவது நெங்சில் 261 ரன்கள் எடுத்தது. இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் 406 ரன்கள் எடுத்த நிலையில் 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பெற்றது.

இந்த நிலையில்  இந்திய அணி 18.4 அவர்களின் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  17 ஆண்டுகளாக இந்திய மகளிர் அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்