திடீரென தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய விராட் கோலி: என்ன காரணம்?

வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:49 IST)
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்.

இந்த நிலையில் திடீரென அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய வீரர் கோலி மும்பை திரும்பியுள்ளதாகவும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குவதற்கு முன்பே அவர் மீண்டும் தென்னாப்பிரிக்கா செல்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ருத்ராஜ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே டிசம்பர் 26 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ஜனவரி 3ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்