கம்மின்ஸுக்கு இவ்வளவு தொகை கொடுத்தது பயனற்றதே… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

சனி, 23 டிசம்பர் 2023 (07:07 IST)
ஐபிஎல் மினி ஏலம் சில தினங்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

அவருக்கு அடுத்தபடியாக அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது உலகக் கோப்பை தொடரை வென்ற ஆஸி அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். அவர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கட்டுபெட்டித்தனமான அணியான ஐதராபாத் ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை செலவு செய்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த சீசனில் அவரைக் கேப்டனாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கம்மின்ஸ் ஒன்றும் சிறந்த டி 20 வீரர் இல்லை என்று முன்னாள் ஆஸி வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி கூறியுள்ளார். அதில் “பாட் கம்மின்ஸ் ஒரு தரமான பவுலர் மற்றும் கேப்டன். ஆனால் டி 20 வடிவத்துக்கு அவர் சரியான வீரரில்லை. டெஸ்ட் கிரிக்கெட்தான் அவரின் பிரதான வடிவம்.  அவர் நல்ல டி 20 பவுலர்தான். ஆனால் அவரை இவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்தது பயனற்றது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்