கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத்: போராடி தோல்வி அடைந்த சென்னை!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (23:32 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணி கடைசி வரை போராடி தோல்வியடைந்தது 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது
 
170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த போட்டியில் குஜராத் அணியின் டேவிட் மில்லர் மிக அபாரமாக விளையாடி 94 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் சென்னை அருகே பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்