சென்னைக்கு வருகிறது 26 மெட்ரோ ரயில்கள்: அல்ஸ்ட்ராம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (14:10 IST)
சென்னைக்கு  26 மெட்ரோ ரயில்களை வாங்குவதற்காக அல்ஸ்ட்ராம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டத்தில் 2-ம் கட்டமாக  மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி ஆகிய புதிய வழிப்பாதைகளின் பணிகள் நடைபெற்று வருகிறது,.
 
இந்த நிலையில் இந்த வழித்தடங்களுக்காக அல்ஸ்ட்ராம்' நிறுவனத்துக்கு 78 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மெட்ரோ ரயிலுக்கு 26 பெட்டிகள் வீதம் 78 பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
இந்த புதிய மெட்ரோ ரயிலில் 900 முதல் 1200 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கபப்ட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்