கருப்புப் பட்டை அணிந்து விளையாடும் இங்கிலாந்து அணியினர்! யார் இந்த கேப்டன் மூர்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:23 IST)
இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இங்கிலாந்து இந்தியா கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் மறைந்த கேப்டன் முரின் நினைவாக இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்டவரான கேப்டன் மூர் 100 வயதைக் கடந்தவர். இவர் கொரோனாவால் இங்கிலாந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட போது கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான நிதி திரட்டலில் ஈடுபட்டார். 100 வயதைக் கடந்த அவர் தனது வீட்டு தோட்டத்தில் 8 சுற்றுகள் நடக்கப் போவதாக அறிவித்தார். அவரின் இந்த வித்தியாசமான நிதி திரட்டல் இங்கிலாந்து  முழுவதும் கவனத்தைப் பெற்றது.

1000 டாலர்கள் நிதி திரட்டப் போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 39 மில்லியன் பவுண்ட் நிதி கிடைத்தது. இந்திய மதிப்பில் 390 கோடி ரூபாய் மதிப்பாகும். இந்நிலையில் இவர் சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் கோளாறுகள் காரணமாக மரணமடைந்தார். அவரின் நினைவைப் போற்றும் வகையாக இங்கிலாந்து வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்