தடுப்பூசிகள் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸை தடுக்குமா?

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (08:18 IST)
கொரோனாவுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களையும் தடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 
உலகம் முழுவதும் 105,401,170 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,292,729 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 77,081,158 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 25,882,678 கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. 
 
இந்நிலையில், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டு உள்ளது. இவற்றின் பரவலும் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, கொரோனாவுக்கு தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களையும் தடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இங்கிலாந்து தடுப்பூசித்துறை மந்திரி, உருமாறிய கொரோனா தொற்றுக்களை தற்போதைய தடுப்பூசிகளே தடுக்கும் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்