தோனியின் இடத்தில் ஹர்திக் பாண்டியா: யார் எதற்காக இதை செய்தார்கள்?

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (13:27 IST)
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 


 
 
அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியில் முதலில் களமிறங்கிய 5 வீரர்கள் என கூறலாம். வழக்கமாக 5 வது இடத்தில் முன்னாள் கேப்டன் தோனி தான் களமிறங்குவார். ஆனால் நடந்து முடிந்த போட்டியில் தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டார். 
 
கடைசியில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் அதிராடியாக விளையாடி 3 ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி, 6 பந்துகளில் 20 ரன்களை எடுத்தார்.
 
இந்நிலையில், கடைசி நிமிடம் வரை தான் முன் கூட்டியே களமிறங்குவது குறித்து எமக்கு தெரியாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 
 
46-வது ஓவரில் கும்ளே, நீ தான் அடுத்து இறங்க போகிறாய், பேடை கட்டிக் கொள் என்று கூறினார். இந்த மாற்றத்திற்கு பின்னணியில் உள்ள காரணங்கள் ஏதும் எனக்கு தெரியாது என தெரிவித்தார்.
 
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, தோனிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை களமிறக்கியது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை அடிக்கக்கூடியவர் ஹர்திக் பாண்டியா. எனவே, தான் இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டது என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்