தவான் மட்டும் அதை செய்யாமல் இருந்திருந்தால்...... இந்தியாவின் கதி என்னவாகியிருக்கும்?

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (11:21 IST)
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தவானின் செயல் இந்திய அணி வெற்றி பெற வழிவகுத்தது.


 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நேற்று புனேயில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது. 
 
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 46வது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அரைசதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.
 
தவான் வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தவான் 46 ரன்கள் எடுத்திருந்தபோது நடுவரால் அவுட் வழங்கப்பட்டது. ஆனால் தவான் உடனே ரிவ்யூ கேட்டார். அப்போது அவர் பேட்டில் பந்து படாமல் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் களத்தில் நீடித்து விளையாடினார். 
 
ஒருவேளை தவான் அப்போது வெளியேறி இருந்தால் ஆட்டம் வேறு திசையில் சென்றிருக்கும். இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து வீரர்களின் பந்துகளை எதிர்கொள்ள திணறி கொண்டிருந்தபோது. தவான் மட்டும் சற்றும் அசராமல் அதிரடியாக விளையாடினார்.
 
தவான் செய்த காரியம் இந்திய அணியின் வெற்றிக்கு ஒருவகையில் உதவியது குறிப்பிடத்தக்கது. தற்போது இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளனர். மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்