எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணியை ரோகித் சர்மா, கோலி ஏமாற்றினர். தவான், பாண்டியா, தினேஷ் கார்த்திக், தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்திய அணி, 46 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 232 ரன்கள் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 1-1 என சமன் செய்தது.