ஐதராபாத் அணிக்கு 7வது தோல்வி: டெல்லி மீண்டும் முதலிடம்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (06:49 IST)
ஐதராபாத் அணிக்கு 7வது தோல்வி: டெல்லி மீண்டும் முதலிடம்!
நேற்று நடைபெற்ற டெல்ல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி மீண்டும் தோல்வி அடைந்தது. டெல்லி அணி அபார வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
 
ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் தவான் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினார். நார்ஜி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய வெற்றி மூலம் டெல்லி அணி 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தில் உள்ளது என்பதும் ஹைதராபாத் அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்