ஒரு உயிரிழப்பு கூட இல்லை: டெல்லி அரசு அசத்தல் நடவடிக்கை

புதன், 22 செப்டம்பர் 2021 (20:17 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகம் இருந்த நிலையில் டெல்லி மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது முற்றிலும் டெல்லி கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளது 
 
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 30 பேர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 19 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட கொரோனாவால் இஒல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,38,586 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,13,090 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 25,085 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 411 என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்