சி எஸ் கே அணியில் இணைகிறாரா டேவிட் வார்னர்?

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (11:00 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் டேவிட் வார்னரும் ஒருவர்.

ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். அதிக அரைசதங்கள் அடித்த சாதனைக்கு சொந்தக்காரர். கடந்த சில ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணியை வழிநடத்திவந்தவர். திடிரென்று கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்ட அவர் பின்னர் அணியிலும் இடம் கிடைக்காமல் இருந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்த சீசன்களில் அவர் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் சி எஸ் கே அணிக்காக விளையாட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதை உறுதிப் படுத்தும் விதமாக நேற்றைய இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சென்னை அணியின் ஜெர்ஸியில் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனால் அடுத்த ஆண்டு ஏலத்தில் அவரை சென்னை அணி எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்