24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் கிரிக்கெட் அணி !

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (17:16 IST)
24 ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று விளையாடவுள்ளது ஆஸ்திரேலிய அணி.

கிரிக்கெட் உலகில் ஜாம்பாவான் என அழைக்கப்படும் அணி ஆஸ்திரேலியா. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகவும் திறமையான வீரர்களால் ஆஸ்திரேலிய அணி அலங்கரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டிற்கு முதன்முறையாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், ஆஸ்திரேலியா ஆடவர் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்