உலகக் கோப்பை டி 20 போட்டி; இந்தியா – பாகிஸ்தான் மோதல்!

வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:13 IST)
இந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கியமான ஒரு நிகழ்வாகும். குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் கடந்த பல ஆண்டுகளாக உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே ஒன்றை ஒன்று எதிர்கொள்வதால் இந்த போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை டி20 போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 23ல் நடக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. குரூப் 2வில் உள்ள இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்