மைதானம் மட்டுமில்லை… இன்ஸ்டாகிராமிலும் நான்தான் கிங்… ரொனால்டோ படைத்த சாதனை!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (08:35 IST)
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.  கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அவர் போர்ச்சுகல் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துவிட வேண்டும் என்ற உறுதியோடு விளையாட உள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இதுவரை யாருமே செய்யாத சாதனையை அவர் படைத்துள்ளார்.

500 மில்லியன் பேர் அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்கின்றனர். இது உலகில் வேறு எந்த நபருக்கும் இல்லாத பாலோயர்ஸ் எண்ணிக்கையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்