விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய விளம்பரங்களை செய்து வருகிறார். இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பைத் தொடரை வென்றதும் அந்த வடிவிலானப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்துக்குள் உள்ளார். இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள சுரேஷ் ரெய்னா “கோலி வெகு சீக்கிரமாகவே டி 20 போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்டார். அவர் மிக எளிதாக 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.