அவுட்டாக அருமையான ஐடியா கொடுத்த இலங்கை வீரர் - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2017 (17:15 IST)
உள்ளூர் போட்டியில் வித்தியாசமாக அவுட்டான இலங்கை வீரர் சமர சில்வாவுக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.


 
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சமர சில்வா இலங்கை அணிக்காக 11 டெஸ்ட், 75 ஒருநாள், 16 டி20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் இலங்கை அணியில் 12 ஆண்டுகள் விளையாடியுள்ளார். தற்போது இலங்கையில் மெர்கண்டைல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. எம்.ஏ.எஸ் யுனிசிலா மற்றும் டீஜய் லங்கா அணிகள் விளையாடியது. 
 
இதில் விளையாடிய சமர சில்வா அவுட்டான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. பவுலர் பந்துவீசியவுடன் சமர சில்வா ஸ்டெம்பிற்கு பின்புறம் ஓடி போய் பந்தை அடிக்க முயற்சித்தார். ஆனால் பவுலர் வீசிய பந்து நேரடியாக ஸ்டெம்பிற்கு சென்றது.
 
இவரது இந்த செயலுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் இவருக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது. தற்போது இவர் அவுட் ஆன வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

நன்றி: Bro

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்