டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!

திங்கள், 20 நவம்பர் 2017 (16:48 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிந்தது.


 

 

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைப்பெற்றது. 5வது நாளான இன்று போட்டி டிராவில் முடிவடைந்தது.
 
போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. லக்மால் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து விளையாடி இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
 
இதையடுத்து 122 ரன்கள் பின்தங்கியிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் தவான் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று 5வது நாளில் டிக்ளேர் செய்தது.
 
இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலே இருந்தது தடுமாற்றத்தை சந்தித்தது. புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் திணறினர். இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
 
இதனால் முதல் போட்டி டிரா ஆனது. இந்தியாவை வெற்றி பெற கனவு கண்ட இலங்கைக்கு அணி கடைசி நாளில் தோல்வி பயத்தை காட்டினார் புவனேஷ்வர் குமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்